நூலின்றி அமையாது உலகு - தமிழ் இலெமுரியா

15 July 2014 4:06 am

நூலின்றி அமையாது உலகு- தொகுப்பாசிரியர் இரா.மோகன்.பேராசிரியர் இரா. மோகன் நூலின்றி அமையாது உலகு என்ற நூலின் மூலம் என்னைக் கவர்ந்த புத்தகங்கள் எனத் தொடங்கி 33 வது தொடரான புத்தக மொழிகள் நூறு வரை நூல்கள் படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். நூல்கள் எப்போதும் ஒரு நாகரிகத்தின் சின்னம். பண்பாட்டின் அடையாளம்; அறிவு வளர்ச்சியின் குறியீடு. வளர்ந்து வரும் சமுதாயத்தின் முன்னோடி. அந்தந்தக் காலச் சூழலை எடுத்துக் காட்டும் கண்ணாடி. இது வெறும் காகிதமல்ல, ஆயுதம். அதுவும் அறிவாயுதம். அறிவை வளர்க்கவும், சிந்தனையைத் தூண்டவும் சமுதாய மாற்றங்களுக்கும் துணையாக இருப்பவை நூல்களே. புத்தகம் என்பது வெறும் அச்சிட்ட பக்கங்களின் தொகுப்பு அல்ல. ஒவ்வொரு படைப்பாளியும் நம்மோடு உரையாடும் ஜீவன் அது. புத்தகங்களுக்கு நன்றி கூறும் வார்த்தை எவ்வளவு மேலானது. நல்ல நூல்களில் நம் கண்ணோட்டம், நல்ல நூல்களே நமக்கு நண்பன் என்ற தத்துவார்த்த வார்த்தைகள் நிறைந்த நல்ல நூல்; மீண்டும், மீண்டும் படிக்க வேண்டிய நூல். வாசிக்காத நாட்களெல்லாம் சுவாசிக்காத நாட்களே என்பது சாலப் பொருந்தும்.வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தீ.நகர், சென்னை – 600 017(பக்கங்கள்: 244 விலை: 150)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி