பாய்வது விடுதலை பதுங்குவது பாதுகாப்பு - தமிழ் இலெமுரியா

15 March 2016 10:16 pm

பாய்வது விடுதலை பதுங்குவது பாதுகாப்பு- புலவர் கண்மணிநாடறிந்த நல்ல சொற்பொழிவாளர், பட்டி மன்ற பேச்சாளர், சுயமரியாதையைப்  போற்றுபவர், பெண்ணினத்திற்கு குரல் கொடுப்பவர், சிறந்த எழுத்தாளர் இப்படி பன்முகத் தன்மை கொண்டவரான புலவர் கண்மணி, திருப்பனந்தாள் செந்தமிழ் கல்லூரி நமக்கு அளித்த நன்முத்தாகும். இவர் படைத்திட்ட இந்நூல் பெண்களின் பெருமையை பறைசாற்றுகிறது. ‘தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை’ என்று தாயை பெருமைப் படுத்துவதுடன் ஏன் அவளுக்கு இவ்வளவு பெருமை? என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கிறார். ‘சுகத்தை தேடியவன் ஆண். சுகத்தையும் கொடுத்து சுமையையும் தன் வயிற்றில் சுமப்பவள் தாய். என இரண்டே வரிகளில் தாயின் பெருமையை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்’. தமிழ் – தமிழினம்- & தமிழனாலேயே கொச்சை படுத்தப்படும் சிதைக்கப்படும் நிகழ்வுகளால் வேதனையடைகிறார். தேர்தல் நேரத்தில்தான் பெண்களின் நினைவே அரசியல்வாதிகளுக்கு வரும். ஓட்டு பெறுவதற்காக பெண்கள் தேவை. உயரத்தில் அமர்ந்துவிட்டால் அவர்களின் பார்வைக்கு பெண்கள் புழு பூச்சிகளைப் போல் தெரிவார்கள் என கொதிக்கிறார். ‘பிறர் கொடுத்து பெறுவது அல்ல சுதந்திரம்’ எடுத்துக் கொள்வதற்குப் புரட்சிப் பெண் இனமே எழுந்து வாருங்கள் என பெண்ணினத்திற்கு விழிப்புணர்வூட்டும் நன்நூலாகும்.வெளியீடு: நிறைமொழி     1-2,ஆர்.கே.ஒ.ஏ.பள்ளி,      முதன்மைச்சாலை,     கோசாகுளம்,மதுரை – 17.                               பேசி: 98945 55778   ( விலை:125   பக்கங்கள்:136)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி