11 January 2015 5:38 pm
பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்- பேரா.ப.மருதநாயகம்உலகின் மூத்த மொழியாக விளங்கும் தமிழ்மொழியின் விழுமியல்களும், சுவடுகளும் இன்று உலகின் முதன்மை மொழிகளாகச் சுட்டப்படும் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், வடமொழி ஆகியவற்றில் காணப்படுகின்றன. செம்மொழியானத் தமிழ்மொழியின் பழந்தமிழ் இலக்கியங்களின் உள்ளீடுகள் பரவாலாக பல்வேறு மொழியின் இலக்கிய ஆக்கத்திற்கு உதவிபுரிந்துள்ளன என்பதை பிற மொழி இலக்கியங்களிலிருந்து சான்றுடன் விரிவாக எடுத்து விளக்கியுள்ளார் பேரா.மருத நாயகம். விவிலியம் காளிதாசன் படைப்புகள், கௌடலீயம், சுக்கிரநீதி போன்ற படைப்புகளில் தமிழ் இலக்கிய பகுதிகளின் எடுத்தாள் கையினை உரிய அகச் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் தமிழிலும் தரமான ஆங்கில ஆய்வு நூல்களை வெளியிட்டு வரும் திரு.இராமசாமி நினைவு பல்கலைகழகத் தமிழ் பேராயம் இந்நூலை வெளியிட்டு தமிழுக்கும் பெருமை சேர்த்துள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள், இலக்கிய வாதிகள் ஆகியோர்க்கு கிடைத்துள்ள ஒரு அரியநூல் இதுவெனலாம்.வெளியீடு: தமிழ்ப் பேராயம், திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக் கழகம் காட்டாங்குளத்தூர் – 603 203 காஞ்சிபுரம் மாவட்டம்(பக்கங்கள்: 272 விலை: 150)