11 January 2015 5:42 pm
பெண்ணின் பெருந்தக்கது இல்- தாயம்மாள் அறவாணன்தமிழ் நிலத்தின் சங்க கால நோக்கில் பெண்கள் எவ்வாறு பங்காற்றியுள்ளனர் என்று தொடங்கி, சங்கப் பெண் புலவர்கள் குறித்த செய்திகள், சிற்றிலக்கியங்களில் பெண்கள், சிற்றிலக்கியம் படைத்த பெண்கள் என இலக்கியச் சான்றுகளுடன் ஒரு வரலாற்று ஆவணமாக வரிசைப் படுத்தியுள்ளார். சங்க காலச் சூழலுக்குப் பின்னர் தமிழ்க் குமுகாயத்தில் பெண்மை குறித்த மாற்றங்கள், பெண்டிர் சந்தித்த எதிர் நிலைப்பாடுகள் என பல அரிய செய்திகளைச் சொல்லி இறுதியாக கடந்த சில நூற்றாண்டுகளின் பெண்களின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியுள்ளார். தாய்வழிச் சமூகமாக இயங்கிய தமிழ் நிலத்தில் பண்பாட்டு படையெடுப்புகளின் நிமித்தம் சமுகவியல் நோக்கில் பெண் எவ்வாறு நடத்தப் பெற்றாள்? என்பன போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். தமிழ்நாட்டில் பெண்ணியத்தின் பங்கு குறித்து அறிய விழைவோர் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல்.வெளியீடு: தமிழ்க்கோட்டம் 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு தெரு, எம்.ஆர்.மருத்துவமனை அருகில் அமைந்தகரை, சென்னை 600 029(பக்கங்கள்: 240 விலை: 120)