15 October 2015 2:13 pm
போலித்தொண்டர் – நாடகம் - தமிழாக்கம் : சங்கராமணி மாணிக்கம்திருமதி சங்கராமணி மாணிக்கம்! மொரிசியசுத் தீவில் பிறந்து வளர்ந்த புலம் பெயர்ந்த தமிழ் மகள். தமிழின் பால் தீராப்பற்றுடையவர். மொரிசியசுத் தீவில் படித்து தமிழில் இளங்கலைப் பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்று, அம்மண்ணில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வருபவர். மொரிசியசுத் தீவில் பெரும்பான்மையான தமிழர்கள் தமிழை மறந்துவிட்ட நிலையில், சங்கராமணி மாணிக்கம் தமிழின் மீது கொண்ட பற்றுதலால் தமிழ்நாட்டுடன் சீரிய முறையில் தொடர்பில் இருப்பது பெருமை கொள்ளத்தக்கது. பிரெஞ்சு நாடக ஆசிரியர் மொலியெர் எழுதிய ‘தார்ச்சிப்’ எனும் நாடகத்தைத் தமிழிலில் போலித்தொண்டர் எனும் மொழியாக்க நாடகநூலின் எந்தப்பக்கத்திலும் மூலத்தின் கருத்துக்கள் சிதையாமலும் அதே நேரம் தமிழ் மண்ணுக்கு ஏற்றாற்போல் நல்ல தமிழில் நாடக பாத்திரங்களின் பெயர்கள் அமைத்து இருப்பதும் நூலை வாசிப்போர் மனம் மகிழும் என்பது உண்மை. விறு விறுப்பான திருப்பங்களும் அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்புகளுடன் பாத்திர படைப்பும் உரையாடலும் கவிதை நயம் மிக்கதாக உள்ளன. போலித்தொண்டரின் புரட்டுப் பொய்களை கண்டு கொண்ட ஓரியின் மனைவி இளமை, மகள் மாரியாய் இவர்களின் சொல்லை கேளாமல், போலித்தொண்டர் மிக உயர்ந்த மனிதர் என எண்ணி அவரின் வாக்கை வேதவாக்காக போற்றி வந்தான். நாடகத்தின் உச்ச கட்டமாக மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இளமை தனது கணவன் ஓரியை மேசையின் கீழே மறைய வைத்து, போலித்தொண்டரிடம் நடத்தும் உரையாடல்களை கேட்க வைக்கிறாள்… ஓரி இதைக்கேட்டு உண்மைகளை அறிந்தானா? இல்லையா? என பல ஆர்வமான காட்சிகளை கொண்டு படைக்கப்பட்ட இந்நூல் நாடக உலகிற்கு புதிய வரவாக அமையும் என்பதை படிப்போர் அறியக்கூடும்.வெளியீடு : சீதை பதிப்பகம், 4/7, ராஜா அனுமந்தா தெரு திருவல்லிக் கேணி, சென்னை – 600 005 (பக்கங்கள் : 136 )