18 August 2015 1:28 pm
பௌர்ணமி இரவின் பேரலை- பூ.அ. இரவீந்திரன்கவிஞர் பூ.அ.இரவீந்திரன் இலக்கிய நயமிக்க தலைப்புகளில் யதார்த்தமான நடையில் தனக்கே உரிய தெளிந்த நீரோடை போன்ற தெளிவை எல்லா கவிதைகளிலும் நிரப்பியுள்ளார். இந்நூலில் உள்ள கவிநயத்தை எடுத்து சொல்லிக்கொண்டே போகலாம். பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பார்களே அது மாதிரி சில வரிகளை இங்கே குறிப்பிடலாம். ‘பச்சைக் கனிகளை பிழிந்து குடித்த வேலையாள் பாசிபடர்ந்த ஏரிக்கரையில் நீட்டி படுத்துவிட்டான்’ என்றும் ‘குழந்தையின் புன்னகையைக் கிள்ளி எடுத்துக் கொல்லைப்புறத்தில் நட்டு வைத்தேன் காலைப் பொழுதின் வெளியில் பூச்செடி ஒன்று சினுங்கியது’ என்றும் ‘வெப்பத்தின் மிச்சம் சாலைகளில் பெருக்கெடுத்தது’ என்றும் ‘மரத்தின் அடியில் காற்று இளைப்பாறிக் கொண்டிருக்கிறது’ என்றும் கவிதை மழையில் நனையச் செய்கிறார். கவிதையை ரசிக்கும் இலக்கிய வாதிகள் முதல் பாமர மக்கள் வரை எல்லாரும் படிக்கக் கூடிய கவிதை நூல் இதுவாகும்.வெளியீடு : கீதா பதிப்பகம் 58, கீதா இல்லம், அன்பு நகர் மூன்றாம் வீதி, இடையார்பாளையம், கோவை – 641 025(பக்கங்கள் : 86, விலை : 100)