மனித நோய்கள் (உயிர் வேதியல் பார்வை) - தமிழ் இலெமுரியா

17 November 2014 11:45 am

மனித நோய்கள் (உயிர் வேதியல் பார்வை) – மருத்துவர் க.அ.அருள் செங்கோர்தமிழினம் ஆட்கொண்டுள்ள நோயைப் போக்கும் வகையில் அரிய சிந்தனைகளைத் தமிழுக்கும் தமிழர்களுக்கும் அள்ளி வழங்கும் அறிஞர் க.அறவாணன், தாயம்மாள் அறவாணன் பெற்றெடுத்த மழலையே இன்று மருத்துவராக வலம் வருகின்றார். உள்ளத்து நோயகற்றும் பெற்றோர் வழியில் உடல் நோய் பற்றியக் கூறுகளை தமிழுலகத்தில் தாய்த் தமிழில் வழங்கியுள்ள மொழிநடை மிகச் சிறப்பாகத் தெரிகின்றது. தமிழில் உயிர் வேதியியல் பார்வையில் வெளி வந்துள்ள முதல் தமிழ் நூல் எனலாம். தமிழில் மேற்கல்வி பெற கலைச் சொற்கள் இல்லையே எனக் கூறி தமிழைத் தவிர்த்து வரும் பிற மொழிப் பற்றாளர்களுக்கு இந்நூல் ஓர் அருமையான எடுத்துக்காட்டு. கொழுப்புப் புரதங்கள் (Lipoprotein), உயர் அடர்த்திக் கொழுப்புப் புரதம் (HDL), இதய நுண்ணொலி சோதனை (Echo Cardiograph), நுரையீரல் விரிவு நோய் (Emphysema), மாதவிலக்கு முற்று (Menopause), மூட்டழற்சி (Osteo Arthritis), கூழ்மப் பிரிப்பு (Dialysis), புறத்துப்புரை (Cortical Cataract), முதர்புரை (Mature Cataract) என எண்ணற்ற அழகு தமிழ்ச் சொற்களைக் கையாண்டு எளிய மக்களும் தம் உடல் நோயை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ள நூல். மருத்துவர் அருள் செங்கோர் முயற்சி தமிழ் வழிக் கல்விக்கு தூண்டு கோலாய் அமையும். மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கி வரும் மருத்துவர் அருள் செங்கோர் வாழ்க. தமிழர்கள் அவசியம் படிக்க வேண்டிய மருத்துவ நூல்.வெளியீடு: தமிழ்க் கோட்டம் 2, முனிரத்தினம் தெரு அய்யாவு குடியிருப்பு எம்.ஆர்.மருத்துவமனை அருகில், அமைந்தகரை, சென்னை – 600 029பக்கங்கள்: 168 விலை: 125

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி