மொழிச் சிக்கல்கள் குறித்த சர்வதேசக் கருத்துகள் - தமிழ் இலெமுரியா

14 April 2014 6:57 am

மொழிச் சிக்கல்கள் குறித்த சர்வதேசக் கருத்துகள்- கண.குறிஞ்சி ஆங்கிலத்தில் ஜோகா சிங் பதிவு செய்துள்ள கருத்துகளை தமிழில் கண.குறிஞ்சி மிக அருமையாக பதிவு செய்துள்ளார். ஒரு குழந்தைக்குப் பயிற்று மொழி தாய் மொழியாகத்தான் இருக்க வேண்டும். தாய்ப் பால், தாய் மொழி, தாய் மண், தாய் நாடு என்ற உணர்வு மங்கிடாமல் அந்த உணர்வுக்கு உயர்வான மரியாதையைத் தருகிறோம். உலகின் பல்வேறு நாடுகள் தாய் மொழியையே பயிற்று மொழியாக்கி உலக அரங்கில் தங்களின் தகுதியை தக்க வைத்துள்ளது நாம் கண் கூடாகக் காணும் நிலை. அரபு நாடு அறிவுத் துறையில் ஆங்கிலம் இல்லாமலேயே பெருமை கொள்ளத்தக்க இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மொழி மற்றும் கல்விக் கொள்கைகளை தீர்மானிக்கும் குழு கண்ணையும், காதுகளையும் மூடிக்கொண்டு காலை, மாலை, இரவு மூன்று வேளையும் ஆங்கிலப் போதையில் மூளை கெட்டுப் போன சான்றிதழ்களாக விளங்குகின்றனர். நாமும் ஆங்கிலத்தின் துதிபாடிகள் என்பதற்கு அடையாளமாக விளங்குகிறோம். எனவே தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதற்கான அடையாளமாக சிறந்த கருத்துகளை இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். மொழி உணர்வினை அறிந்து கொள்ள ஏதுவான நூலாகும். வெளியீடு: புதுமலர் பதிப்பகம், நந்தி-காவ்யா வளாகம், முதல் வீதி, சக்தி நகர் (மேற்கு), திண்டல், ஈரோடு – 638 012(பக்கங்கள்:40 விலை: 25)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி