மௌனமும் மணி முடியும் - தமிழ் இலெமுரியா

15 March 2014 7:42 am

மௌனமும் மணி முடியும்- வைகறை கவிஞர் வைகறை பதிவு செய்துள்ள கருத்துகள் ஜொலிக்கும் தங்கமாய், மின்னும் வைரமாய் பரிணமிக்கின்றன என்ற நிலைப்பாட்டில் அதி அற்புதமான கட்டுரைகள், மனதில் ஆழப் பதியும் வண்ணம் எண்ணச் சிதறல்கள் எழுத்து ஓவியங்கள் பளிச்சிடும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலேயன் வெளியேறினான், ஆங்கிலம் நிலைத்து நிற்பதால் ஆங்கிலேயனின் அடிமைதான் நாம் என்ற எடுத்துக்காட்டுடன் தனக்கே உரித்தான பாணியில் படைத்துள்ளார். தமிழ் தெரிந்த கடவுள் வேண்டும் என்று ஓரிடத்தில் குறிப்பிடுவதன் மூலம் நூலாசிரியரின் தமிழ்ப் பற்றை உணர முடிகிறது. நல்ல கருத்துகள் பலவற்றை வெளிக் கொணர்ந்து, மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தும் இந்நூலினை அனைத்து தமிழ் உணர்வாளர்களும் வாசித்து பயன் பெற வேண்டும்.வெளியீடு:பொன்னி2/1758, சாரதி நகர்,என்ஃபீல்டு அவென்யூ,மடிப்பாக்கம், சென்னை – 600 091(பக்கங்கள்: 264 விலை: 200)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி