வழித்திசைகள் - தமிழ் இலெமுரியா

16 September 2015 10:13 am

வழித்திசைகள்- சீர்வரிசை சண்முகராசன்சீர்வரிசை சண்முகராசன் தாம் பல்வேறு காலங்களில் பல தலைப்புகளில் தினசரி நாளிதழ்களிலும் மாத, வார இதழ்களிலும் எழுதி வெளிவந்த, பல கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதில் அவர் குடும்ப பாசம், தனிமனித ஒழுக்கம், பகுத்தறிவுச் சிந்தனைகள் என  மற்றும்  தமது வாழ்வில் ஏற்பட்ட பல சுவையான செய்திகள் பலவற்றை அவருக்கே உரித்தான எளிய நடையில் குறிப்பிட்டுள்ளார். முதல் கட்டுரையில் ஆடி மாதம் திருமணம் செய்யக்tடாது’’ எனும் மூடவழக்கத்தை அதாவது இன்றைய சூழலில், மக்கள் நிரம்பவே இதை சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். பெரியவர்கள் அப்படி ஏன் அன்று சொல்லி வைத்தார்கள்? என்பதை காரணங்களுடன் விளக்கியுள்ளார். "மனித நேயத்துக்கு பகைவர் இல்லை’’ எனும் தலைப்பில், காந்தி ஒருமுறை பெரியாரிடம் கேட்டார் "ஏன் நீங்கள் பிராமணர்களை எதிர்க்கிறீர்கள்’’? இந்தியாவில் ஒரு பிராமணன் கூட நல்லவர் இல்லையா? என்று கேட்டார் "இருந்தால் நீங்களே சொல்லுங்கள்’’ என்றார் பெரியார் "ஏன் கோபாலகிருஷ்ண கோகலே இல்லையா’’ என்று காந்தியடிகள் சொன்னார்."இந்தியாவில் உங்கள் கணக்குப்படி ஒரு பிராமணனைத்தானே சொல்லமுடிந்தது’’ என்றார் பெரியார். பெரியார் விமர்சித்தது பிராமணர்களின் சாதி வேறுபாடுகளைத்தானே தவிர; எந்த ஒரு தனிப்பட்ட பிராமணனை அல்ல; என்பதும், இதையேதான் அவரின் தொண்டர்கள் பின்பற்றுகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருப்பதிலிருந்து அவரது பெரியார் கொள்கையின் ஈடுபாட்டை நாம் காணமுடிகிறது.வெளியீடு : The Lemuriya Publications, 1301, 13th Floor,   Neha, Kores Towers, Pokhran Road No. 1, Vartak Nagar, Thane (W) – 400 606, Maharashtra. (பக்கங்கள் : 160    விலை : 100)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி