15 October 2015 2:15 pm
வாழ்க்கைக் காடு-சாந்தா தத் பிறப்பிடம் காஞ்சிபுரம் என்றாலும் பெரும்பான்மையான கதைகள் ஆசிரியரின் இருப்பிடமான ஆந்திரா, தெலங்கானா, ஐதராபாத் ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்ட அனுபவக் குவியல்களாக அமைந்துள்ளன. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கைக்கும் கடந்த, நிகழ், எதிர் என்னும் மூன்று காலங்கள் இயற்கை வழிகளில் இருக்கின்றன. மனிதனோ மறைபொருள் போன்ற இருள் அடர்ந்த குகையாக மனத்தை வைத்துக் கொண்டு வெளிச்சத்தை வெளியே தேடித் தேடி அலைகின்றான். இப்படியான வாழ்நிலைகளை முன்வைத்து கதைகள் பின்னப்பட்டுள்ளன. சிறுகதை என்பது வாழ்வியல் சுருக்கம். நிகழ்வுகளின் உயிர்ச்சாரம். ஆணாக இருந்து கொண்டு பெண் பெயரில் எழுதிடும் எழுத்துக்காரர்கள் இருப்பதுபோல, பெண்ணாக இருந்து ஆண்களின் உணர்வுலகத்தை வெளிக்காட்டும் வாழ்க்கைக் காடு" என்னும் சிறுகதைகளின் தொகுப்பு புலப்படுத்தும் துடிப்புகள், துள்ளல்கள் மிக எதார்த்தமானவையாக உள்ளன.வெளியீடு: திண்ணை வெளியீடு, 95/40, சுப்பிரமணியசாமி கோயில் தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை – 600 015. (பக்கங்கள்:128, விலை: 80)"