17 February 2015 4:45 pm
விடியலை நோக்கி- பாசறை மு. பாலன்உலகத் தமிழர்களின் அவல நிலையில் ஆரம்பித்து காமன்வெல்த் மாநாடு கேள்வியும் பதிலும் என்று இறுதி வடிவமாகக் கொண்டுள்ள விடியலை நோக்கி எனும் நூல் மூலம் நல்ல பல கருத்துகளைக் கூறி சாதியற்ற சமுதாயம் அமைந்திட வேண்டும், சமுக நீதிக் கொள்கை பரவலாக்கப்பட வேண்டும் என்ற வலிமையான கருத்தினை ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். நமது அடையாளங்களைத் தொலைத்துவிட்ட இடத்திலிருந்துதான் தேட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பாசறை முரசு கட்டுரைகளின் தொகுப்பே விடியலை நோக்கி நூலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருடைய கட்டுரைகள் திராவிட இயக்கத்தின் வேர்களைத் தேடிப் பயணிக்கிறது என்பதே உண்மை. உலகில் மதச் சண்டைகள் உண்டு; ஆனால் சாதிச் சண்டைகள் இந்தியாவில் மட்டுமே நடைபெறுகிறது என்கிற பெருமை நமக்கு நாமே தேடிக் கொண்டது. மதம், சாதி, மூடநம்பிக்கைகள், ஊருக்கு ஊர் கோயில்கள் என நிறைந்த இந்தியாவில் சாதிக்கு எதிராக புத்தர் முதல் அறிஞர் அண்ணா வரை போராடி அழிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை இந்நூல் பதிவின் மூலம் நூலாசிரியர் மு.பாலன் தன் எண்ணங்களையும் ஏக்கங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.வெளியீடு : வசந்தா பதிப்பகம், பு.எண்.26, குறுக்குத் தெரு, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை – 600 088(பக்கங்கள்: 224 விலை: ரூ.150/-)