18 May 2014 6:15 am
An Anthology of Modern Tamil Poetry - டாக்டர். ஆனைவாரி இரா.ஆனந்தன் இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் ஆங்கில முறையில் கல்வி கற்று வருவதால் அவர்கள் தமிழ் மொழியிலுள்ள கவி வளத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பல தமிழறிஞர்களின் கவிதைகளை கவிநயம் குன்றாமல் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து நூலாக வடிவமைத்துள்ளார் நூலாசிரியர் டாக்டர் ஆனைவாரி இரா.ஆனந்தன். மேலும் பிறமொழி மக்களும் தமிழ் மொழியின் கவிச்சுவையை நுகர்வதற்கு இத்தகைய நூல்கள் மிகுந்த பயனுள்ளவையாக விளங்குகின்றன. பொதுவாக இந்நூலின் மூலம் வள்ளலார், ஔவையார், தாகூர், பாரதியார், பாரதிதாசன், சரோஜினி நாயுடு, காளிதாஸ், திருவள்ளுவர் ஆகியோரின் கருத்துகளை உலகறியச் செய்துள்ளார் நூலாசிரியர். ஒரு கவிதையை மொழிப்பெயர்க்க ஒரு கவிஞனாலேயே முடியும். நவீன தமிழ் கவிதைகளின் பாடல் தொகுப்பாக விளங்கும் இந்நூல் தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்து மொழி மக்களும் வாசித்து மகிழக் கூடிய ஓர் இனிமையான நூல் ஆகும்.வெளியீடு: கவிக்குயில் பதிப்பகம், 14, எம்.ஐ.ஜி ஃப்ளாட்ஸ், என்.வி.என் நகர் முதல் தெரு, திருமங்கலம், சென்னை – 600 040(பக்கங்கள்: 232 விலை: 175)