அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை - தமிழ் இலெமுரியா

18 May 2014 7:56 am

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முதல் செயற்குழுக் கூட்டம் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. சங்கச்  செயலாளர் திரு வா.சிறிதரன் தமிழ் வாழ்த்துப் பாட, சங்கச் செயல்தலைவர் மு.மீனாட்சிசுந்தரம் தலைமை ஏற்றார். அமைப்புச் செயலாளர் திரு சுந்தரராசன் வரவேற்புரை ஆற்றினார்.. பேரவையை பதிவு செய்யப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை விளக்கிப் பேசினார். தலைவர் தன் தலைமை உரையில் பேரவை தொடங்குவதற்கு 1982 முதல்  மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் பேரவையின் நோக்கங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார். பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் கோ.தாமோதரன், தாளின் அகர்த் தமிழ்ச் சங்கம், பேரவை நிருவாகிகள் புலவர் சுந்தரராசன், பாவலர் கணபதி, ராஜா, சோழ நம்பியார், முத்துராமன் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், அபுபக்கர் கோட்டயம் தமிழ் கலை வளர்ச்சி மன்றம், நவிமும்பைத் தமிழ்ச் சங்கம்: மகாதேவன், இராசகோபாலன், சுந்தரம். கிருபானந்தன் ஐதராபாத் மாநகரத்  தமிழ்ச் சங்க செயலாளர், புகழேந்தி மைசூர் – தமிழ்ச் சங்கம், திருமதி தேன்மொழி தென் கன்னட மாநில செயற்குழு உறுப்பினர், வெ.பாலு,- சுந்தரராமன் மும்பைத் தமிழ்ச் சங்கம், டாக்டர் முத்து புதுவைத் தமிழ்ச் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.—-  பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப் பெற்ற தீர்மானங்கள்*மொழிச் சிறுபானமையராகத் தமிழர்கள் நிறைந்துள்ள பகுதிகளில் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் நீக்கப்பட்டு வருகின்றது. தமிழ்க் கல்வியைப் பெற்றோர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்ச் சங்கங்கள் ஆங்காங்கு இயங்கிவரும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும்.*தமிழ்நாட்டிற்கப்பால் மொழிச் சிறுபான்மையினராக வாழும் தமிழர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து அந்தந்தப் பகுதிகளில் இயங்கும் தமிழ்ச்சங்கங்கள் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைமைக்குத் தெரிவித்திட வேண்டுமென்று செயற்குழு கேட்டுக் கொள்கிறது.1.   இந்தியா பல தேசிய இனங்கள், பல தேசிய மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் கூட்டாட்சி நாடு. கூட்டாட்சி நெறியை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியத் துணைக் கண்டத்திலிலுள்ள மாநில மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக இந்திய அரசு ஏற்றுக் கொள்ள வகைசெய்திடும் முறையில், அரசியல் அமைப்புச் சட்டத்தில் தகுந்த திருத்தங்களைக் கொண்டுவரப் பட வேண்டும்.2.   தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாகவும் பொது நூலான திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாகவும் இந்திய அரசு அறிவிக்க வேண்டும்.3.   இலங்கையின் வடக்கு -கிழக்குப் பகுதிகளில் வாழும் ஈழத் தமிழர்களின் இன்னல்களைத் தீர்ப்பதற்கான சரியான வழிமுறைகளை ஆய்ந்து தக்கமுடிவுகளை அமையவிருக்கும் புதிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் ஐ.நா. அவையின் மாந்த உரிமை ஆயத்தின் முடிவுகளை ஆதரிக்க வேண்டும்.4.   சிங்களக் கடற்படையினராலும் அல்லலுறும் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதாரச் சிக்கல்களுக்கு உரிய தீர்வை அமையவிருக்கும் புதிய நடுவண் அரசு உடனடியாகக் காண வேண்டும். 5.   தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள் பெயரில் தமிழ்நாடு அரசு வழங்கும் தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள் விருதுகளுக்கு, இந்தியாவின் பிற மாநிங்களிலும் வெளி நாடுகளிலும் வாழும் தமிழறிஞர்களையும், தமிழ் அமைப்புகளையும் கருத்தில் கொண்டு விருதுகளை வழங்கிச் சிறப்பிக்க வேண்டும். 6.  தமிழ்நாட்டிற்கப்பால் பிற மாநிலங்களில் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகள், தமிழை மொழிப்பாடமாகக் கொண்டுள்ள பள்ளிகள், கல்லூரிகள், தமிழ்ச் சங்கங்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு தேவையான நிதி உதவிகளை வழங்கி உதவிட வேண்டும். 7.  இந்தியாவில் தமிழ்நாட்டிற்கப்பால் பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலன்களைக் காத்திட உதவும் வகையில் தமிழக அரசு தனி அமைச்சகத்தை உருவாக்கிட வேண்டும்.8.  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் நிறுவி, தமிழ் மொழி, இலக்கியங்கள், வரலாறு ஆகிய தளங்களில் உயராய்வுக்குத் தேவையான நிதி உதவிகளையும் நல்கைகளையும் அளித்திட வேண்டுமென்றும், அதே போல, உலக நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களிலும் தமிழாய்வுக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கிட வேண்டும் என்றும் அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தீர்மானங்கள் நிறைவேற்றியது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி