19 August 2015 2:26 pm
மகாராட்டிரா தமிழர் நலக் கூட்டமைப்பு சார்பாக மும்பை சயான் பகுதியில் அமைந்துள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி கலையரங்கில் மறைந்த மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழர் நலக் கூட்டமைப்பின் தலைவரும் மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினருமான தமிழ்ச் செல்வன் தலைமை ஏற்றார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அப்துல் கலாம் பற்றிய ஒலி- ஒளி குறும்படம் திரையிடப்பட்டது. தமிழர் நல கூட்டமைப்பின் அமைப்பாளர்களாகிய சு.குமணராசன், எஸ்.இராஜேந்திர சுவாமி, மா.கருண், அனிதா டேவிட், கராத்தே முருகன் ஆகியோர் மறைந்த மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு புகழஞ்சலி செலுத்தி உரையாற்றினர். மேலும் புனேவைச் சேர்ந்த கல்வியாளர் பாலசுப்ரமணியன், கே.வி. அசோக் குமார், ஆ.பி.சுரேஷ், கவிஞர் புதிய மாதவி போன்ற மும்பையில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிருவாகிகள், தமிழ் ஆர்வலர்கள் என நாற்பதிற்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாக்டர் அப்துல் காலாமின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர்.