இலக்கிய கலாச்சார விழா - தமிழ் இலெமுரியா

19 August 2015 2:44 pm

தில்லி தமிழ்ச்  சங்கம்  மற்றும்  நவி மும்பை தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய இலக்கிய, கலாச்சார விழா தில்லி தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தமிழர் நலன் முன்னேற்றத்துக்கும் தொடர்ந்து பாடுபட்டு வரும் நவி மும்பை தமிழ்ச் சங்கத்தின் சேவையைப் பாராட்டி அதன் உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் நவி மும்பை தமிழ்ச் சங்க தலைவர் நா.மகாதேவன் ஏற்புரை வழங்கினார். தில்லி தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் என்.கண்ணன்  வரவேற்றார். பின்னர் தில்லி தமிழர்களின் கலை, இலக்கிய திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவரும் கே.எம்.எஸ். கலையுலகம் நிறுவனர் கே.முத்துசுவாமிக்கு தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் 2015 ஆம் ஆண்டுக்கான கலை மற்றும் சமூக ஆர்வலர் விருதும் நவி மும்பை தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.ஏகாம்பரம், நிருவாகக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், ‘தமிழ் இலெமுரியா’ முதன்மை ஆசிரியர் சு.குமணராசன், தென்னிந்திய கல்விக் கழக பேராசிரியை மீனாட்சி வெங்கடேசு ஆகியோருக்கு தமிழ்  ஆர்வலர்" விருதும் வழங்கப்பட்டன. பின்னர் ‘சங்கச் சுடர்’ எனும் தில்லி தமிழ்ச்  சங்கத்தின்  இதழ் வெளியிடப்பட்டது. மும்பையைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் கீதா வெங்கடேசுவரரின் மாணவர்களின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிக்குப் பின்னர் மும்பை புறநகர் நவி மும்பையைச் சேர்ந்த பேச்சாளர்கள் பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம்  நடைபெற்றது. "

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி