11 January 2015 6:03 pm
தமிழ் இலெமுரியாவின் புரவலராக விளங்கி கடந்த ஓராண்டுக்கு முன்பு இயற்கை எய்திய ந.கருப்பண்ணன் – சம்பூரணம் நினைவேந்தல் நிகழ்வு ஈரோடு பழையபாளையம் ரோட்டரி சி.டி அரங்கத்தில் சற்று வேறுபாடான முறையில் நடைபெற்றது. தமிழ், தமிழர் பண்பாட்டுக் காவலர்களாக விளங்கும் கருப்பண்ணன் குடும்பத்தினர் நிகழ்வின் ஓர் அங்கமாக தானிய உணவுகள் படைத்துப் பழகும் பயிற்சி வகுப்பு" நடத்தினர். திருசெங்கோடு ‘நல்ல சோறு’ அமைப்பைச் சார்ந்த சி.ராசமுருகன் செயல்முறையுடன் செய்து காண்பித்தார். தொடர்ந்து நடைப்பெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் தோழர் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை விகித்து உறையாற்றினார். நிகழ்வின் சிறப்பு அம்சமாக மருத்துவர் கு.சிவராமன் தமிழ்மக்களின் பண்பாட்டு உணவு பழக்க வழக்கங்கள், உணவு பண்டங்கள் அதன் உடல் நலக்கூறுகள் குறித்தும் அயல் நாட்டு இறக்குமதி உணவுகளின் தீமைகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார். "தமிழ் இலெமுரியா" முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் கருப்பண்ணன் சிறப்பியல்புகள் குறித்து நினைவுரையாற்றினார். இறுதியில் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ் உணவாக தூதுவளை ரசம், கறிவேப்பிலை பால், கேழ்வரகு/ திணை பாயாசம், சாமைப் பொங்கல், குதிரைவாலி காய்கறிக் கலவைச் சோறு, கேழ்வரகு இனிப்புருண்டை உள்ளிட்ட புரோதம் மிகுந்த தமிழ் பண்பாட்டு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது."