19 August 2015 2:29 pm
தமிழர் நட்புறவுப் பேரவையின் சார்பாக உலக நட்பு நாள் விழாவில் பேரவையின் 14ஆம் ஆண்டு விழா மும்பை செம்பூரில் நடைபெற்றது. விழாவினை மேனாள் மும்பை நகர்மன்ற உறுப்பினர் எஸ்.வேலுச்சாமி தொடங்கி வைத்தார். செம்பூர் தரூண் பாரத் நற்பணி மன்றத்தின் தலைவர் எஸ்.இராஜேந்திர சுவாமி தலைமை வகித்தார். பி.கிருஷ்ணன், டி.கே.சந்திரன், வழக்கறிஞர் சின்னபாண்டியன், துரை கிருஷ்ணன், கராத்தே முருகன், எஸ்.அருணாசலம், ப.க.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் திருமதி சாரதா சிறினிவாசன் நட்பு தீபமேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். கிங்பெல் வரவேற்புரையாற்ற தொகுப்புரையை கவிஞர் குணா வழங்கினார். நட்பு நாள் சிறப்புரையை தமிழ் இலெமுரியா" முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் வழங்கினார். தொடர்ந்து பாவலர் முகவை திரு நாதனின் "மழலைமொழி" நூலை செல்லத்தங்காள் அறக்கட்டளை நிறுவனர் செ.அப்பாத்துரை வெளியிட்டார். பேராசிரியர் சமீராமீரான் நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். மராத்திய மாநில தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ்.அண்ணாமலை, வழக்கறிஞர் ராசாமணி, எஸ்.எ.சுந்தர், வெ.பாலு, த.பாலகிருஷ்ணன், கொ.வள்ளுவன், இராசமாணிக்கம், கே.எஸ்.மணி, ராசா உடையார், இல.முருகன், பி.தேவராசன், எம்.கே.கலியபாபு, ஆறுமுக பாண்டியன் ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர். முகவை திருநாதன் ஏற்புரையாற்றினார். இறுதியில் மறைந்த மாமேதை அப்துல் கலாமுக்கும் இசைமேதை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இறை ச.ராசேந்திரன், நெல்லை பைந்தமிழ், ஞாயிறு ராமசாமி, வதிலை பிரதாபன், ஆறுமுக பெருமாள், தமிழ் நேசன் ஆகியோர் கவிதாஞ்சலி செலுத்தினர். நிறைவாக த.செ.குமார் நன்றியுரையாற்றினார்."