11 January 2015 5:50 pm
தமிழ்த் தாராமதி சமூக இலக்கியச் சிற்றிதழின் சார்பில், ‘கவிதையும் கவிதை சார்ந்தும்’ என்ற பொருளில் ஒருநாள் கவிதை கருத்தரங்கம் கோவை இடையபாளையம் காந்தியடிகள் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. தமிழ்த் தாராமதி இதழாசிரியர் புலவர்.பூ.அ.இரவீந்திரன் வரவேற்புரை வழங்கினார். கலைவாணி பொறியியல் கல்லூரித் தாளாளர் டி.வி.செல்வராஜ், மேனாள் தலைவர் பொ.இராமலிங்கம், சேலம்.வி.மாணிக்கம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சைத் தமிழ்ப்பல்கலை கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் நிகழ்வுகளைத் தொடங்கி வைத்து உரை வழங்கினார். சாகித்திய அகாடமி பொறுப்பு அலுவலர் முனைவர் அ.சு.இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார். பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் மருதாசலம் அடிகளார் நெய்வேலிக் கவிஞர் அ. சுந்திரமுர்த்தியின், பூத்துக் குலுங்கும் புதுமலர்கள் என்ற கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த் தாராமதியின் சிறப்பாசிரியர் கவிஞர் கார்முகில் பழனிசாமி, பொறுப்பாசிரியர் சேலம் கி.இளங்கோ, மருத்துவர் ஜெயந்தி, மருத்துவர் சிவகுமார் ஆகியோர் நூல்களைப் பெற்றுகொண்டனர். எழுத்தாளர் மூ.பழனி அவர்களுக்கு மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் அவர்கள் கவின்மிகு நிழற்படக்கலைஞர் – என்ற விருது வழங்கிச் சிறப்பித்தார் . கலை இலக்கிய விமர்சகர் இந்திரன், குவைத் முதலீட்டு வங்கி அலுவலர் மு.சந்திரசேகரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னராசு, காந்தியடிகள் கல்வி நிறுவனர் க.அ.சுப்பிரமணியம், வளர்தமிழ் இயக்கப் பொதுச் செயலாளர் புலவர் கா.ச.அப்பாவு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். முற்பகல் நிகழ்வுகளுக்குச் செந்தமிழ் செகநாதன் நன்றியுரை வழங்கினர். இந்திரன், முனைவர் கு.கணேசன், முனைவர் சி.மா. இரவிசந்திரன் ஆகியோர் தலைமையில் கவிதை வழங்குதல் நடைப்பெற்றது. கவிஞர் சென்னிமலை தண்டபாணி, சென்னை கிருசாங்கினி, சேலம் சூர்யநிலா, நெய்வெலி ப.நடராசன், முனைவர் திலீப்குமார், கவிஞர் அழகுதாசன், கவிஞர் உமாமகேசுவரி, புதுவை மனுசி, வெ.பூ.பழனிசாமி, கவிஞர் வெற்றி பேரொளி, முனைவர் புவனேசுவரி, பூவரசி மறை மலையான் உள்ளிட்ட 27 கவிஞர்கள் கவிதைகளை வழங்கினர்.