கவிஞர் வெண்ணிலாவுக்கு விருது - தமிழ் இலெமுரியா

16 August 2014 10:49 am

கவிஞரும் எழுத்தாளருமான அ.வெண்ணிலா எழுதிய பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்" சிறுகதைத் தொகுப்பிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் மாநில அளவில் நடத்திய புதுமைப்பித்தன் நினைவுச் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான முதல் பரிசு கிடைத்துள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமுஎகச.வின் மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன் தலைமையேற்றார். மாநில அளவில் நடைபெற்ற புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைத் தொகுப்புக்கான போட்டியில் முதல் பரிசினை வென்ற கவிஞர் அ.வெண்ணிலாவுக்கு ரூ.5000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன் வழங்கினார். பரிசு வென்ற வெண்ணிலாவின் சிறுகதைத் தொகுப்பு பற்றி சு.வெங்கடேசன், பேராசிரியர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் ஆகியோர் பாராட்டிப் பேசினர். இவரது படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக பாடத் திட்டத்திலும் நூல்கள் இடம் பெற்றுள்ளன."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி