செவிக்கு விருந்து படைத்த பாரதி பாடல் அமுது - தமிழ் இலெமுரியா

14 February 2014 9:33 am

நவிமும்பையிலுள்ள வாசிஃபைன் ஆர்ட்ஸின் சார்பில் பாரதி பாடல் அமுது விழா வாசியில் நடைபெற்றது. பி.எச்.இரமணியும் அவரது குழுவினரும் சற்றொப்ப இரண்டு மணி நேரம் இரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டனர் என்று சொன்னால் மிகையாகாது. சிந்து நதியின் இன்னிசை என்னும் பாடலுடன் தொடங்கி, பாராதியாரின் பாடல்கள் அனைத்தையும் இரமணி வழங்கிய விதம் சிறப்பாக இருந்தது. நிகழ்ச்சிக்கு திருமதி சுகந்தி தொகுப்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக இளம் தலைமுறையினரிடையே பாரதி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென இரமணி கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், கோரேகான் கான கலா, வசாய் தமிழ்ச் சங்கம், கார்கர் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளிலிருந்து பார்வையாளர்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி