16 August 2016 6:25 pm
அண்மையில் நடந்த தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு பவழ விழாவில் அக்கல்லூரியின் மேனாள் மாணவரும் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியருமான முனைவர் சு.மாதவனுக்குத் ‘தமிழ்ச் செம்மொழி ஆளுமை விருது’ வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை அழகப்பா பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் வழங்கினார். இவர் குடியரசுத் தலைவர் வழங்கிய செம்மொழி இளந்தமிழறிஞர் விருதையும் ஏற்கெனவே பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது