தில்லித் தமிழ்ச் சங்கத் தோரணவாயில் - தமிழ் இலெமுரியா

15 July 2014 4:38 am

தில்லி தமிழ்ச் சங்கம் கடந்த 68 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.  தமிழ்நாட்டுத் தலைவர்களில் இங்கு வராதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு முன்னாள் குடியரசு தலைவர் கியானி சேயில் சிங், ஆர். வெங்கட்ராமன், டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் மற்றும் முன்னாள் தமிழ்நாடு முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி மேலும் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்  ராஜகோபலாச்சாரியர் உட்பட பல தலைவர்கள் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு வருகை தந்து சிறப்பித்து இருக்கிறார்கள். தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு தமிழக அரசு தமிழ்த் தாய் விருது" கடந்த ஆண்டு வழங்கியுள்ளது. தில்லி தமிழ்ச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அதற்கு ஒரு தோரணவாயில் அமைக்க அண்மையில் தமிழ்நாடு முதல்வர் செல்வி செ.செயலலலிதா 25 இலட்சம் வழங்கினார். இந்த தோரணவாயிலை தில்லி பொறியாளர் கே.கருணாநிதி பொறுப்பேற்று வடிவமைத்துள்ளார்.  இந்த தோரண வாயில் மிகவும் சிறப்பு அம்மசங்களை கொண்டது. தரை மட்டத்திலிருந்து கீழே 16 அடி ஆழத்தில் அடித்தளம் போடப்பட்டு இரண்டு பக்கங்களிலும் பிரம்மாண்டமான 4 அடிக்கு 4 அடி அளவுள்ள தூண்கள் எழுப்பபட்டுள்ளது. இந்த தோரண வாயிலின் உயரம் 34 அடி 2 அங்குலம், அகலம் 27அடி கொண்டது. தரை மட்டத்திற்கு அடியிலும், மேல்புறத்திலும் பெரும் தூண்களால் இணைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலின் இரு புறங்களிலும் இரட்டை யாழி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல்புறம் உயரமான இருபுறமும் திருவள்ளுவர் மற்றும் ஒளி விளக்கு ஏந்திய பெண்களின் சிற்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேல் சாரத்தின் நடுவில் ஆறு அடி உயரமுள்ள தமிழ்த் தாயின் சிலை அமைந்துள்ளது. மேலும் சோழர் காலத்தின் சிற்பங்களும், உத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது.  இந்த தோரண வாயில் தில்லித் வாழ் தமிழர்களுக்கு ஓர் வரலாற்றுப் பதிவாக நிகழ்வாக இருக்கும். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நிருவாகிகள் தலைவர் எம்.என்.கிருஷ்ணமணி, பொதுச் செயலாளர் திரு இரா.முகுந்தன், இணைச் செயலாளர் கே.இராகவன் நாயுடு ஆகியோரினுடைய முயற்சியினால் இத்தோரணவாயில் அமைந்துள்ளது. தில்லி வாழ் தமிழ் மக்களுக்கு பெருமையும் தமிழ்ச் சங்கத்திற்கு அழகையும் சேர்த்துள்ளது."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி