9 January 2014 5:10 am
மகாராட்டிரா மாநிலம் நவிமும்பையைச் சேர்ந்த பா.செகதீசன் எழுதியுள்ள சிந்தாமணி – கவின்மிகுக் காட்சிகள்; கற்பனைகள்; கவிதைகள்." என்னும் இலக்கிய நூலின் முதல் தொகுதி வெளியீட்டு விழா அவர் பிறந்த கள்ளக்குறிச்சியில் கல்லைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்றது. கல்லைத் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர் நாராயணசாமி தலைமை வகித்தார். சென்னை அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கத் தலைவர் இளவரச அமிழ்தன், சென்னை மணிவாசகர் பதிப்பக மேலாளர் குருமூர்த்தி, கல்லைத் தமிழ்ச் சங்கப் புரவலர் வி.என்.சந்திரசேகர், வணிகச் செம்மல் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலினினை அருணாசலம் வெளியிட, மக்கள் மனநல மருத்துவர் உதயகுமார் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மேனாள் இயக்குநர் முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் ஆய்வுரை நிகழ்த்தினார். பாராட்டுரையினை தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினர் கோமுகி மணியன், கல்கைக் கம்பன், ஆசுகவி ஆராவமுதன், குறுந்தொகைக் குரிசில், கவிஞர் சக்தி, புலவர் சயராமன், ஆசிரியச் செம்மல் சுப்பிரமணியன், கவிஞர் பெண்ணை வளவன் ஆகியோர் வழங்க ஏற்புரையினை நூலாசிரியர் பா.செகதீசன் நிகழ்த்தினார்."