19 August 2015 2:31 pm
ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு வி.பி.வி.அரங்கில் அழகன் கருப்பண்ணன் எழுதியுள்ள ‘வா வாழ்வே நிகழ்!’ கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்விற்கு தஞ்சைத் தமிழப் பல்கலைக் கழகத்தின் மேனாள் பேராசிரியர் புலவர் செ.இராசு தலைமை வகித்தார். நூலாசிரியர் அழகன் கருப்பண்ணன் ஏற்புரை வழங்கினார். சென்னை மெட்டக்ஸ் லேப்பின் நிருவாக இயக்குநர் வீ.க.செல்வக்குமார் வரவேற்புரையாற்ற ‘தமிழ் இலெமுரியா’ முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் நூல் அறிமுகவுரை வழங்கினார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நூலின் முதல் படியினை வி.எஸ்.எம்.வீவ்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மு.இரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார். பின்னர் கவிஞர் கே.சுவாமிநாதன், என்.இராம கிருட்டிணன், திருமதி செகதா கணேஷ், வழக்கறிஞர் சு.இராத கிருட்டிணன், ப.செயக்குமார், வெ.தேவராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவின் நிறைவாக திருமதி சுகந்தி பெரியசாமி நன்றி கூறினார்.