மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா - தமிழ் இலெமுரியா

15 September 2014 8:00 am

இந்தியப் பேனா நண்பர் பேரவை, நெல்லை மாவட்டக் கிளை சார்பாக, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சுப்புலாபுரம் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, விலையில்லா நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப் பெற்றது. விழாவிற்கு பள்ளி உதவித் தலைமையாசிரியர் டி.மூக்கையா தலைமை தாங்கினார். பேரவை நண்பர் கே.எஸ்.குரு கண்ணன் வரவேற்புரையாற்ற, இணைச் செயலாளர் எஸ்.கண்ணன், விருதுநகர் மாவட்டப் பேரவைக் கிளை அமைப்பாளர் டி.சி.கே.எஸ்.மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.ஏசுதாசு, சுப்ரமணி அறக்கட்டளை நிருவாகி எஸ்.சுப்பையா, நண்பர் பொன்.கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரீச் பவுண்டேசன் இயக்குனர் எஸ்.மாசானமுத்து கருத்துரையாற்றினார். இந்தியப் பேனா நண்பர் பேரவைத் தலைவர் மா.கருண் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். சுப்ரமணி அறக்கட்டளை எஸ்.நெடுமாறன் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை எஸ்.மாசானமுத்து, பொ.கல்யாண சுந்தரம், எஸ்.சுப்பையா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி