9 October 2013 11:40 pm
நடுவணரசின் உள்துறை அமைச்சர் சுசில்குமார் சிந்தே அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொகுப்பை முனைவர் ப.இரா.சுபாசு சந்திரன் ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் எழுதியுள்ளார். இந்நூலின் மராத்தி மொழி பெயர்ப்பை மாண்புமிகு ஹர்சவர்த்தன் பாட்டீல் (மராத்திய மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர்) புனே நகரில் வெளியிட்டார். விழாவில் மூத்த பத்திரிக்கையாளர் அருண் டிகேகர், விசுவாசு பாட்டீல், மொழிபெயர்ப்பாளர் சந்தோசு சேனை மற்றும் வெளியீட்டாளர் உல்லாசு லட்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் தமிழ் மொழியாக்கம் அடுத்த மாதம் சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் ரோசையா தலைமையில் வெளியிடப்பட உள்ளது.