மொழிபெயர்ப்புத் துறையில் மும்பை நாகலட்சுமிக்கு விருது - தமிழ் இலெமுரியா

14 April 2014 8:14 am

திருப்பூர் தமிழ்ச் சங்கம் ஆண்டு விழா மற்றும் இலக்கிய விருதுகள் பரிசளிப்பு விழா, திருப்பூர் புத்தக திருவிழா கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. தமிழ்ச் சங்க செயலாளர் லோகநாதன் வரவேற்புரையாற்ற, தலைவர் முருகாநந்தன் தலைமை வகித்தார். யுனிவர்சல் பள்ளி தாளாளர் லோகநாதன் முன்னிலை வகித்தார். இலக்கிய விருது நடுவர்களான, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் திலிப் குமார் ஆகியோர், விருது பெற்ற படைப்புகள் குறித்து பேசினர். திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.இலக்கிய விருது பெற்றோர்: கட்டுரை: எண்களின் அன்பர் சீனிவாச ராமானுஜன் வாழ்வும், கணிதமும் – சிவராமன், சிறுவர் இலக்கியம்: கைத்தறி பெட்டகம் – சிறுமுகை காரப்பன். சிறுவர் இலக்கியம்: உலகம் போற்றும் உன்னை – சிவ பாரதி, கவிதை: துரோகத்தின் நிழல் – வெண்ணிலா. தீ உறங்கும் காடு – சக்தி ஜோதி. புதினம் (நாவல்) 6174 – மும்பையைச் சேர்ந்த சுதாகர். சிறுகதை: தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் – மாரி செல்வராஜ். மொழி பெயர்ப்பு: சுமித்ரா – சைலஜா. இதர பிரிவு: அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் – சேதுபதி. நோய்க்கு நோ" சொல்வோம் – டாக்டர் கணேசன் ஆகியோருக்கு 2012 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்கப் பட்டது.  தமிழ் மொழி பெயர்ப்பு துறைக்காக, மும்பையை சேர்ந்த நாகலட்சுமி, சாகித்ய அகாடமி இளம் எழுத்தாளர் விருது பெற்ற கன்னியாகுமரியை சேர்ந்த மலர்வதி ஆகியோர் பாராட்டப்பட்டனர். அவர்கள் ஏற்புரை வழங்கினர். சங்க பொருளாளர் ராஜூ நன்றி கூறினார்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி