வாழ்க்கைத் துணை ஏற்பு விழா - தமிழ் இலெமுரியா

17 November 2014 11:56 am

மும்பை விழித்தெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் சிறீதர் தமிழன் – பிரேமா காந்தி ஆகியோரின் வாழ்க்கைத் துணை ஏற்பு ஒப்பந்த விழா மும்பை, சயான் எம்.எஸ்.சுப்புலக்குமி அரங்கில் நடைபெற்றது. திருமண நிகழ்வுக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழிகளை மணமக்கள் இருவரும் ஒப்புதழ் அளித்த பின்னர் சுயமரியாதைத் திருமணமாக மணவிழா நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தி கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன், மும்பை வருமான வரித்துறை ஆணையர் அரவிந்த் சொன்டக்கே, தமிழக ஒடுக்கப்பட்டோர் மக்கள் இயக்கத் தோழர் இளம்பரிதி, சமுகவியலாளர் ஓவியா, தமிழ் இலெமுரியா முதன்மை ஆசிரியர் சு.குமணராசன், மும்பை எழுத்தாளர் கவிஞர் புதியமாதவி, தமிழ் ஸ்டுடியோ நிறுவனர் மோ.அருண் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் மும்பை பல்கலைக் கழக மாணவர்கள் அடங்கிய ரிபப்ளிக் பேந்தர்" என்ற கலைக் குழுவினரின் நாட்டின் சமுக, பொருளாதாரப் பார்வை குறித்த விழிப்புணர்வுப் பாடல்கள் இசைக்கப்பட்டன. விழா நிகழ்வுகளை மும்பை விழித்தெழு இயக்கத் தோழியர் ஈசுவரி தங்க பாண்டியன் தொகுத்து வழங்கினார். மணமக்களின் பெற்றோர் துரை சுந்தரம் – பிரேமா துரைசுந்தரம், காந்தி பெருமாள் – பேரின்பமணி காந்தி மண விழாவை இன்முகத்துடன் நிறைவேற்றி செல்வங்களை வாழ்த்தினர். மும்பையின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழ் அமைப்புகளின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மணவிழா ஏற்பாடுகளை உ.பன்னீர் செல்வம், இரா.தங்க பாண்டியன், மகிழ்நன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி