அதிகபட்ச உஷார் நிலையில் ம்யூனிக் நகரம் - தமிழ் இலெமுரியா

2 January 2016 10:34 am

ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறக் கூடும் எனும் எழுந்த அச்சத்தின் காரணமாக, நகர் முழுவதும் அதிகபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தாண்டுதினக் கொண்டாட்டங்களின் போது, இஸ்லாமிய அரசு என தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்பு, பல இடங்களில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜெர்மனியக் காவல்துறையினர் கூறுகின்றனர். நேற்று நள்ளிரவுக்கு சற்று முன்னர், நகரின் இரு ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கூட்டம் மிகுந்த இடங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர். அந்த இரு ரயில் நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்றாலும், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தாங்கள் விழிப்புடன் இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஜெர்மனியுடன் நட்பாக இருக்கும் நாடுகளிடமிருந்து கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அடுத்தே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி