அப்துல்கலாம் மறைவால் மனமுடைந்த அசிரியர் சின்னதுரை. - தமிழ் இலெமுரியா

28 July 2015 2:10 pm

கடந்த 18ம் தேதி திண்டுக்கல் வந்த அப்துல் கலாம் தனது முன்னாள் பேராசிரியரை சந்தித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் இயேசு சபை மையத்தில் முன்னாள் பேராசிரியரும், பாதிரியாருமான சின்னத்துரை வயது(91) தங்கியுள்ளார். 1952ல் இருந்து 1954 வரை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தபோது, கலாமுக்கு, இவர் பேராசிரியர். கலாமுக்கு விண்வெளி இயற்பியல் பாடம் நடத்தினார். அவர் அளித்த தூண்டுதலே, கலாம் அணு விஞ்ஞானியாக மாற வழி வகுத்தது. கடந்த 18ம் தேதி தனது பேராசிரியரை சந்திப்பதற்காகவே கலாம் திண்டுக்கல் வந்தார். அவருக்கு சால்வை அணிவித்த கலாம், தான் எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கினார். இருவரும் நெகிழ்ச்சியுடன் அன்பை பரிமாறிக் கொண்டனர். கலாம் அவர்கள் தனது முன்னாள் ஆசிரியர் மீது கொண்ட மரியாதையை காட்டியுள்ளார். 27-07-2015 முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் மறைவு செய்தியறிந்து பேராசிரியர் சின்னதுரை கதறி அழுதார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி