அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் ஏமாற்றிவிட்டன - தமிழ் இலெமுரியா

9 November 2015 10:53 am

இலங்கையில் தங்களுக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் தீபாவளி முற்பண அதிகரிப்பு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து ஆர்பாட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டுவரும் மலையகத் தோட்ட தொழிலாளர்கள் இம்முறை தீபாவளியை துக்க தினமாக அனுஷ்டிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே தொழிற்சங்கங்களினால் அறிவிக்கப்பட்ட அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வு மற்றும் அதிகரிக்கப்பட்ட தீபாவளி முற்பணத்தை பெற்றுத் தர தொழிற்சங்கங்களும் மலையக அரசியல் தலைமைகளும் தவறிவிட்டதாகவும் தொழிலாளர்களினால் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தும் மலையக தொழிற்சங்க தலைமைகள் மீது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் வகையில் கடந்த இரு வாரத்திற்கும் மேலாக தோட்டத் தொழிலாளர்கள் தங்களது தோட்டங்களிலே கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நலன்கள் தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் ஏற்கனவே அமலிலிருந்த கூட்டு ஓப்பந்தம் கடந்த மார்ச் 31ம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது. சம்பள உயர்வு தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் கடந்த 7 மாதங்களில் 7 சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்த போதிலும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. தொழிற் சங்கங்களினால் முன் வைக்கப்பட்ட ‘நாளொன்றுக்கு ரூபா 1000’ என்ற கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் நிராகரித்து விட்டது. இருந்த போதிலும் தங்களுக்கு தீபாவளிக்கு முன்னதாக நியாயமான சம்பள அதிகரிப்பு கிடைக்கும் என தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இதுவரையில் அது பற்றிய சாதகமான அறிவிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி