11 February 2014 11:02 pm
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பெண்கள் வெட்கப்படத் தேவையில்லை. அவர்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்தார். திண்டிவனத்தை அடுத்த கிடங்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி ஏற்றுவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவில் திருமாவளவன் தலைமை தாங்கி, கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பெண்களையும் பெருமளவில் சேர்க்க வேண்டும். கட்சியில் இணைய விரும்பி வருகிற விண்ணப்பங்களில் பெண்களின் விண்ணப்பங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. மாற்று கட்சியினர் மாநாடு நடத்தினால், அதில் கூட்டத்தை அதிக அளவு காண்பிப்பதற்காக நமது சமுதாய பெண்களை அழைத்துச் செல்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் வெட்கப்படத் தேவையில்லை. கட்சியில் சேர்ந்து பொதுத் தொண்டாற்ற பெருமையோடு முன்வர வேண்டும்’’ என்றார் திருமாவளவன்.