அலை பேசிகள் விந்தணுக்களை பாதிக்கிறதா? - தமிழ் இலெமுரியா

19 June 2014 12:58 am

மனிதர்கள் தங்களின் கால் சட்டைப்பையில் அலைப்பேசிகளை வைப்பதனால் அவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாகவும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் வீரியமான செயற்பாட்டிலும் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் பிரிட்டனில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செய்திருக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் குழு 1492 ஆண்களின் விந்தணுக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பத்து வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை விரிவாக அலசி ஆராய்ந்தது. இந்த ஆய்வின் முடிவில், செல்லிடபேசிகளில் இருந்து உருவாகும் சூடும், மின்காந்த அலைகளும் கதிரியக்கமும் சேர்ந்து மனிதர்களின் விதைப்பைகளின் விந்தணு உற்பத்தியையும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் செயற்படும் தன்மையையும் ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய மருத்துவர் பியானோ மாத்யூஸ் தெரிவித்திருக்கிறார். அதேசமயம் இந்த ஆய்வின் முடிவுகள் முழுமையானவை அல்ல என்று மற்ற விந்தணு ஆய்வாளர்கள் இவற்றை புறந்தள்ளியிருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட ஆண்களின் மற்ற பழக்கவழக்கங்கள், உணவு மற்றும் உட்கொண்ட மருந்துகள் போன்றவற்றை இந்த ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளாத நிலையில் அலை பேசிகளை கால் சட்டைப்பையில் வைப்பதனால் மட்டுமே இவர்களின் விந்தணு உற்பத்தியும் விந்தணுக்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக கூறுவதை ஏற்கமுடியாது என்கிறார் ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விந்தணு ஆய்வாளர் மருத்துவர் ஆலன் பேசி தெரிவிக்கிறார். தமது ஆய்வின் முடிவுகள் இறுதியானவை அல்ல என்பதை ஏற்றுக்கொள்ளும் பியானோ மாத்யூஸ், செல்லிடபேசிகளின் சூடும், மின்காந்தப்புலம் மற்றும் கதிரியக்கவீச்சு ஆகியவை விந்தணுக்களில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் குறித்து மேலதிக ஆய்வுகள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை தமது ஆய்வின் முடிவுகள் குறிப்புணர்த்துவதாக தெரிவிக்கிறார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி