ஆட்துணையின்றி அகதிகளாக வரும் சிறார்கள் - தமிழ் இலெமுரியா

21 September 2015 10:21 am

ஐரோப்பா செல்வதற்காக செர்பியா வரும் அகதி சிறார்களில் கால்வாசிக்கும் அதிகமானோர் பெரியவர்களின் துணையின்றி தனியாக வருவதாக சேவ் த சில்ட்ரன் அமைப்பு கூறுகிறது. இந்த வருடத்தில் வந்த 5000 க்கும் அதிகமான சிறார்கள் குடும்பத்தினர் மற்றும் பெற்றோரின் துணையின்றி, தனியாக வந்துள்ளதாகவும், அவர்கள் துஷ்பிரயோகத்துக்கும் ஆட்கடத்தலுக்கும் உள்ளாக்கப்படும் ஆபத்து உள்ளது என்றும் அந்த அமைப்பு கூறுகின்றது. சிரியாவில் போரில் இருந்து தப்பித்து, தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு, விரக்தியடைந்த நிலையில் தினமும் நூற்றுக்கணக்கான சிறார்கள் செர்பியாவை வந்தடைவதாகவும், அவர்களில் பலருக்கு அவசரமான மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் அது கூறுகின்றது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி