ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மால்கம் டர்ண்புல் பதவியேற்றுள்ளார். - தமிழ் இலெமுரியா

16 September 2015 10:53 am

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மால்கம் டர்ண்புல் பதவியேற்றுள்ளார். அந்தப் பதவியில் இருந்த டோனி அபாட்டை, லிபரல் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் தோற்கடித்த நிலையில், நேற்று அவர் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஆஸ்திரேலியாவை குடியரசாக மாற்ற வேண்டும் எனும் இயக்கத்துக்கு ஒருகாலத்தில் தலைமையேற்றிருந்த டர்ண்புல் அவர்கள், இன்று எலிசபெத் அரசிக்கு விசுவாசமாக இருப்பேன் என்று, அரசியின் பிரதிநிதியான கவர்னர் ஜெனரலுக்கு முன்னர் பதவியேற்றார். கடந்த மூன்று ஆண்டுகளில் நான்காவது பிரதமராகப் பதவியேற்றுள்ள அவர், தடுமாற்றத்தில் இருக்கும் நாட்டின் பொருளாதரத்தை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். முன்னர் பிரதமராக கடைசி முறையாக உரையாற்றிய டோனி அபாட், தனது அரசு சாதித்துள்ளவை குறித்து பெருமை அடைவதாகவும், ஆனால் சுழலும் முறையில் தலைவர்கள் வருவதும் போவதும் நாட்டுக்கு நல்லது அல்ல எனக் கூறினார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி