ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் 100 வீடுகள் எரிந்து நாசம் - தமிழ் இலெமுரியா

28 December 2015 10:04 am

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் எரிந்து நாசமாயின. இதில் பிரபல சுற்றுலா நகரங்களான வைரிவர் மற்றும் செபரேஷன் கிரீக் ஆகிய இரண்டு நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் Great Ocean Roadஉம் இந்த காட்டுத்தீயால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வேகமாக பரவிய காட்டுத்தீயின் தீவிரம் காரணமாக இந்தப் பகுதிகளில் வசித்த பலரும் அங்கே சென்றிருந்த சுற்றுலாப்பயணிகளும் தமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து தப்பி வேறு இடங்களுக்குச் சென்றனர். அங்கே பெய்த மழை இந்த காடுத்தீயின் தீவிரத்தை ஓரளவு தணிக்க உதவியிருந்தாலும் அதனால் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. கடந்தவாரத்தில் துவங்கிய இந்த காட்டுத்தீ கடந்த இரண்டுநாட்களாக அங்கே நிலவிய வெய்யிலின் உக்கிரத்தாலும் வீசிய பெருங்காற்றாலும் மேலும் தீவிரமடைந்தது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி