15 July 2014 5:06 am
இங்கிலாந்து கிறிஸ்தவத் திருச்சபையின் நிருவாகப் பொதுக்குழுவான தி ஜெனரல் சினோட், இத்திருச்சபையில் பெண்கள் ஆயர்களாக நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்து வாக்களித்துள்ளது.திங்கட்கிழமையன்று ஜெனரல் சினோட்டில் நடந்த வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் பெண்கள் பிஷப் நியமனத்துக்கு ஆதரவாக கிடைத்துள்ளது. இந்த ஒப்புதலின் விளைவாக இந்த வருடத்தின் இறுதிக்குள்ளாகவே ஆங்கிலிக்கன் திருச்சபையில் பெண் ஆயர்கள் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட இதே திட்டத்தை திருச்சபையில் உள்ள பழமைவாதிகள் நிராகரித்தனர். ஆனால் இம்முறை, ஆண் ஆயர்களை மாற்றாகக் கோரும் உரிமை உட்பட, சில விட்டுக்கொடுப்புகள் அவர்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலிக்கன் மதகுருமார்களில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கும் பெண் பாதிரியார்கள் திருச்சபைக்குள் தங்களுக்கு சம உரிமை வழங்கப்படுவது, திருச்சபையில் தங்களது தகுதியை பெருமளவு உயர்த்தும் என்று கூறுகிறார்கள்.