இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட், இன்று ஐந்து வெளிநாட்டுச் செய்கோள்களுடன் , விண்ணில் ஏவப்பட்டது. - தமிழ் இலெமுரியா

1 July 2014 12:00 am

சென்னை அருகே, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதிஷ் தவன் ஏவு தளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நிகழ்ச்சியைக் காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார்.  பிரான்ஸ், கனடா, ஜெர்மனி , சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டால் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. பல கோடி டாலர்கள் பெறுமதியுள்ள விண்ணில் செய்கோள்களை ஏவும் வர்த்தகத்தில், இந்தியா ஒரு வளர்ந்து வரும் சக்தியாக விளங்குகிறது. இந்த ஏழு-கட்டு உயரமும், 230 டன் எடையுமுள்ள பி.எஸ்.எல்.வி சி-23 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது, குழுமியிருந்த விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளும், ஊழியர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். " இந்த ஐந்து வெளிநாட்டு செய்கோள்களை இந்தியா விண்ணில் தனது ராக்கெட் மூலம் ஏவியது, இந்தியாவின் விண்வெளித் திறனை உலகம் அங்கீகரித்தற்கு சாட்சியாகும் ", என்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. பி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் இது வரை 40 வெளிநாட்டு செய்கோள்கள் உட்பட 67 செய்கோள்களை விண்ணில் ஏவியிருக்கின்றன. இந்திய விண்வெளி நிறுவனம் 2008ல் ஒரே ஏவலில் 10 செய்கோள்களை விண்ணில் ஏவியிருந்தது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி