26 July 2014 1:21 am
2035ஆம் ஆண்டு வாக்கில் இந்த எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 19 லட்சம் என்ற அளவுக்கு சென்றுவிடும் என்றும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாடாளுமன்ற மேலவையில் தெரிவித்துள்ளார். மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய மன்றத்தின் ஆய்வுகளின்படி 2035ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் ஓராண்டில் புற்றுநோயால் உயிரிழக்கின்றவர்களின் எண்ணிக்கையும் 8 லட்சமாக அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சை அளிப்பதற்கு போதுமான மருத்துவமனைகளும், போதுமான மருத்துவ நிபுணர்களும் உள்ளார்களா என்று காட்டக்கூடிய தரவுகள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் புற்றுநோய் சிகிச்சை பற்றிய மேற்படிப்புகளுக்கான இடங்களை மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். அவ்வாறு அதிகரிக்கப்படும்போது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு பொருத்தமாக ஆசிரியப் பணிகளும் அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையில் போதுமான நிபுணர்கள் இல்லை என்றும், இப்போது உள்ளதைப்போல பத்து மடங்கு அதிகமான எண்ணிக்கையில் மருத்துவ நிபுணர்கள் தேவை என்றும் சென்னையின் அடையார் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவரான டாக்டர் சாந்தா கூறினார். ஆசிரியர் எண்ணிக்கையை அதிகரிப்பது, கல்வியின் தரத்தை மேம்படுத்துவது போன்றவற்றை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.