11 February 2014 10:49 pm
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி குறித்த அமெரிக்க நிலைப்பாட்டில் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படுகின்றது. 2002ஆம் ஆண்டில், குஜராத் கலவரங்களை கையாண்ட விதம் குறித்து நரேந்திர மோடி கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார். இந்த சந்திப்பு அடுத்த வாரம் நடக்கவிருப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெரும் என்று பரவலாக எதிர்ப்பார்க்கப்படும் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடியுடன் அமெரிக்காவின் உறவை பலப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்த சந்திப்பு பார்க்கப்படுவதாகவும் செய்தியாளர்கள் கூறுகின்றனர். மோடிக்கும் நான்ஸி பாவலுக்கும் இடையேயான இந்த சந்திப்பை தாங்கள் உறுதிப்படுத்த முடியும் என்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர், இந்த சந்திப்பிற்கான வேண்டுகோளை நான்ஸி பாவல்தான் முன்வைத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.