21 October 2015 10:20 am
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வீரேந்தர் ஷேவாக், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். தனது 37வது பிறந்த நாளான 20-10-2015 அன்று அவர் இதை அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு முறை முச்சதம் அடித்த நான்கே கிரிக்கெட் வீரர்களில் ஷேவாக்கும் ஒருவர். இந்தியாவில் இந்த சாதனையைச் செய்த ஒரே பேட்ஸ்மன் அவர்தான். தனக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆலோசனை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஷேவாக், ஆனால் தனக்கு வழங்கப்பட்ட எல்லா அறிவுரைகளையும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்கு மன்னிப்பைக் கோரினார். " காரணம், நான் என் பாணியில் விளையாடினேன்" என்றார் அவர்