இந்திய மக்கள்தொகையில் கால்வாசிப் பங்கினர் வறட்சியால் பாதிப்பு - தமிழ் இலெமுரியா

21 April 2016 5:06 pm

இந்தியாவின் மக்கள் தொகையில் கால்வாசிப் பங்கினரான சுமார் 33 கோடிப் பேர் வரையில் தற்போது வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அவசரகால நிதியுதவிகள் அனுப்பப்படுவதாக உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ள அறிக்கை ஒன்றில் அதிகாரிகள் கூறியுள்ளனர். மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகின்றது.அங்கு பிரிமியர் லீக் போட்டிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் சில பாகங்கள் பருவமழைக்கு முன்னதாக, வழமையான வறட்சியை எதிர்நோக்கியுள்ளன.ஆனால், இம்முறை நீர்நிலைகளில் நீர்மட்டம் கணிசமான அளவு குறைந்துள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி