இரானுக்கான தூதரை குவைத் மீள அழைத்தது - தமிழ் இலெமுரியா

6 January 2016 3:20 pm

சவுதி அரேபியாவில் ஷியா மதகுருவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதை அடுத்த பிராந்திய பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், இரானுக்கான தனது தூதுவரை குவைத் மீள அழைத்துள்ளது. சவுதி அரேபியா ஷியா மதகுருவான நிம்ர் அல் நிம்ருக்கும் மேலும் 46 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றியதை அடுத்து, கடந்த 2-1-2016 அன்று இரானிய தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் தாக்கப்பட்டு, அதற்கு தீயும் வைக்கப்பட்டது. பதிலடியாக இரானுடனான இராஜ்ஜிய உறவுகளை சவுதி அரேபியா துண்டித்துக்கொள்ள, பஹ்ரைன் மற்றும் சுடானும் அதனை பின்பற்றின. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுமாறு அமெரிக்கா, ஐநா, மற்றும் துருக்கி ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன. மத்திய கிழக்கில் அதிகாரப்போட்டியில் சுன்னிக்கள் அதிகமாக வாழும் சவுதியும், ஷியாக்கள் அதிகமாக வாழும் இரானும் கடும் போட்டியாளர்களாக திகழ்வதுடன், சிரியா மற்றும் யேமனில் நடக்கும் மோதல்களில் எதிரெதிர் அணிகளை ஆதரிக்கின்றன.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி