1 November 2013 12:20 am
முதன்மை அமைச்சர் மன்மோகன் சிங் இல்லத்தில் கூடிய அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில், பொதுநல மாநாட்டை பல நாடுகள் தொடர்புடைய சர்வதேச விவகாரமாக அணுக வேண்டும். இதை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்சினையாக கருதக் கூடாது. சர்வதேச விவகாரங்களில் இந்தியாவுக்கென பிரத்யேக கொள்கை உள்ளது. அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். ஆகவே பொதுநல மாநாட்டில் முதன்மையமைச்சர் மன்மோகன் சிங் பங்கேற்பதில் எந்தவித ஆட்சேபமும் இல்லை" என்று காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கையில் நடைபெறும் பொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன."