இலங்கையில் மழை-வெள்ளம்; ஒரு லட்சம் பேர் பாதிப்பு - தமிழ் இலெமுரியா

16 November 2015 10:42 am

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடும் மழை பெய்துவருவதுடன் பல பிரதேசங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை 15-11-2015 மதியம் வரையான தகவலின்படி, வடக்கில் கிளிநொச்சியில் ஒருவரும் வடமத்தியில் நொச்சியாகம பகுதியில் ஒருவரும் மழைவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பத்து மாவட்டங்களில் சுமார் 28 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பேரிடர் மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேற்கில் கம்பஹா மற்றும் வடக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களும், மலையகத்தில் மாத்தளை, கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை நிலையத்தின் துணை இயக்குநர் கே.ஏ.டி.பி.கே. கொடிபிலி கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக பல இடங்களிலும் தங்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனிடையே புத்தளம் மாவட்டத்தில் 5000க்கும் மேற்பட்டவர்கள் மழைவெளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பேரிடர் மேலாண்மை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி