10 September 2013 7:11 am
இலங்கை இராணுவத்தின் மூன்றாவது பாதுகாப்புக் கருத்தரங்கில் பாரதிய ஜனதா கட்சி, சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 20 இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். போருக்குப் பின் இலங்கை- சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும் என்ற தலைப்பில் நேற்று முதல் 3 நாள் கருத்தரங்கை இலங்கை ராணுவம் நடத்தி வருகிறது. இதில் 66 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் இருந்து பா.ஜ.கவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 20 பேர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கின்றனர்.