இலங்கை காவல் துறையினரிடம் தமிழில் புகார் தெரிவிக்க தொலைத்தொடர்பு சேவை துவக்கம் - தமிழ் இலெமுரியா

11 September 2016 5:56 pm

இலங்கை காவல் துறையினரிடம் குற்றச் செயல்கள் தொடர்பில் தமிழ் மொழியில் உடனடியாக முறைப்பாடு செய்வதற்கான தொலைத்தொடர்பு சேவையொன்று காவல்துறை அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் வவுனியாவில் துவக்கி வைக்கப்பட்டது.குற்றச் செயல்கள் தொடர்பில் காவல்துறையுடன் அவசரமாகத் தொடர்பு கொள்வதற்காக 119 என்ற இலக்க தொலை தொடர்பு வசதி ஏற்கனவே இருக்கின்ற போதிலும், தமிழ் மொழி மூலம் அந்த இலக்கத்தில் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் தமிழ் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக காவல்துறையினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்தே இந்த புதிய தொலைத்தொடர்பு சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சேவை முதல் முறையாக வடமாகாணத்தின் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கென ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.சமூகத்தில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல்கள் போதைப் பொருள் வியாபாரம், ஊழல் நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டுபிடிக்கவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் இந்த தொலைத்தொடர்பு சேவை பெரிதும் உதவியாக இருக்கும் என்றார் பூஜித ஜயசுந்தர.அத்துடன் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் விரிவடைந்துள்ள உறவைப் பலப்படுத்தவும் அமைதி, சமாதானம், நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றை உருவாக்கி இரு தரப்பினரும் நெருக்கமாக செயற்படுவதற்கும் காவல்துறையினருடைய இந்தப் புதிய சேவை வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி