11 November 2013 2:22 am
உள்நாட்டு அரசியல் காரணங்களினாலேயே கொழும்பில் நடக்கும் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாதிருக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பி.பி.சியிடம் கூறியுள்ளார். மன்மோகன் சிங் வராமல் இருக்க முடிவு செய்திருப்பது எங்களின் மாநாட்டின் வெற்றியைப் பாதிக்காது. அதனை நாங்கள் ஒரு சிக்கலாகக் கருதவில்லை என்றும் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். அவரது முடிவு எங்களுக்கு தோல்வி அல்ல, நாங்கள் அவரை அழைத்தோம், அவர் வந்திருந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருப்போம்’ என்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். கொழும்பில் நடக்கும் பொதுநல உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதிருக்க இந்திய தலைமையமைச்சர் எடுத்துள்ள முடிவு இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாக கருதப்பட முடியுமா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜி.எல். பீரிஸ் இந்தப் பதிலைக் கூறினார்.