இலங்கை வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற முடியாது: இராஜபக்சே உறுதி - தமிழ் இலெமுரியா

1 November 2013 12:14 am

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே. இலங்கையில் உச்சகட்ட போர் நடந்து முடிவடைந்து விட்ட நிலையிலும், இன்னும் அந்நாட்டின் வடக்கு மாகாணப்பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ராணுவத்தினரை வாபஸ் பெற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் வடக்கு மாகாணப் பகுதிக்கு தேர்தல் நடத்தப் பட்டு, முதலமைச்சராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார். அவரும் வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என அதிபர் மகிந்த ராஜபக்சேயிடம் வலியுறுத்தி வருகின்றார். ஆனால், இது தொடர்பான அனைவரது கோரிக்கைகளையும் தொடர்ந்து நிராகரித்து வருகிறார் மகிந்த ராஜபக்சே.  நாட்டின் பாதுகாப்பு கருதியே வடக்கு மாகாணத்தில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது என்று ராஜபக்சே தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் ராஜபக்சே. அப்போது அவர் பேசியதாவது: 4 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை ராணுவம் வெற்றி கொண்ட பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எனது அரசு போதிய நிவாரணத்தை வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு கிளம்பியது. அதை தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என்ற வற்புறுத்தலும் எழும்பியது. இது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இதை செய்யவும் முடியாது. இவ்வாறு மகிந்த ராஜபக்சே பேசியுள்ளார். 

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி